News & Events

Northern Central Hospital is a medical institution which has the privilege of providing quality patient care.

நொதேண் சென்றல் வைத்தியசாலையினால் மேற்கொள்ளப்பட்ட இலவச இருதய சத்திரசிகி « Go back

29

April 2021

நொதேண் சென்றல் வைத்தியசாலையினால் மேற்கொள்ளப்பட்ட இலவச இருதய சத்திரசிகி

Tags: Heart Surgery

பழைய சந்தை வீதி, அக்கரைப்பற்று எனும் முகவரியில் வசித்து வரும் 26 வயது நிரம்பிய திருமதி. றோமன் றாகல் என்பவருக்கு இருதய மேல் அறைகளுக்கிடையில் துவாரம் ஒன்று உள்ளமை இருதய சிகிச்சை நிபுணர் Dr. சரித் டி சில்வா அவர்களினால் கண்டறியப்பட்டு சத்திர சிகிச்சைகளுக்காக இருதய சத்திர சிகிச்சை நிபுணர் Dr.றேனுக கன்னங்கர அவர்களுக்கு பரிந்துரைத்தார். ஆயினும் கொவிட்-19 அசாதாரண சூழ்நிலையால் யாழ் போதனா வைத்தியசாலையில் நிலவும் இடநெருக்கடி காரணமாக சத்திரசிகிச்சை மேற்கொள்ளவதில் காலதாமதம் ஏற்பட்டது. எனவே திருமதி. றோமன் றாகல் அவர்களின் ஏழ்மை நிலையினைக் கருத்தில் கொண்டு இருதய சத்திர சிகிச்சை நிபுணர் Dr.றேனுக கன்னங்கர அவர்களினால் எமக்கு முன்வைக்கப்பட்ட வேண்டுகோளிற்கமைய திருமதி. றோமன் றாகல் அவர்களிற்கு நொதேண் சென்றல் வைத்தியசாலையின் அதிநவீன சத்திர சிகிச்சைக் கூடத்தில் எவ்விதமான கட்டணங்களுமின்றி முற்றுமுழுதாக இலவசமாக இருதய மேல் அறைகளுக்கிடையில் உண்டான துவாரத்தினை அடைக்கும் சத்திர சிகிச்சையானது இருதய சத்திர சிகிச்சை நிபுணர் Dr.றேணுக கன்னங்கர அவர்களினால் கடந்த 29.04.2021 அன்று மாலை 4.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு இரவு 8.00 மணியளவில் வெற்றிகரமாக நிறைவுசெய்யப்பட்டது. இச்சத்திரசிகிச்சையினை கட்டணங்கள் இன்றி இலவசமாக நிறைவு செய்த *Dr. றேணுக கன்னங்கர (இருதய சத்திர சிகிச்சை நிபுணர்) அவர்களுக்கும் மற்றும் இச்சத்திர சிகிச்சையில் கட்டணங்கள் இன்றி இலவசமாக பங்கேற்று இச்சத்திர சிகிச்சையினை வெற்றிகரமாக நிறைவு செய்வதற்கு உறுதுணையாக இருந்த *Dr. S. பிரேமகிருஸ்ணா (மயக்க மருத்துவ நிபுணர்) *Dr. Mrs. ஜானகி அருள்மொழி (மயக்க மருத்துவ நிபுணர்) *Dr. N. ஸ்ரீஸ்கந்தராஜா (உதவி சத்திர சகிச்சை நிபுணர்) *Dr.K.B. பிரசாந்தன் (M/O) *Dr. Y. கௌரிநேசன் (M/O) *Dr. P. ஹிந்துஹாசன் (M/O) *Mr. P. ரகுவரன் (சத்திர சகிச்சை தொழிநுட்பவியலாளர்) *Mr. B.K.G.E.K. குலதுங்க (சத்திர சகிச்சை தொழிநுட்பவியலாளர்) *Mrs. R. ஸ்கொலஸ்ரிகா (தாதிய உத்தியோகத்தர்) *Ms. J.A.R.I. குமாரி (தாதிய உத்தியோகத்தர்) *Ms. S.P. தாரகா (தாதிய உத்தியோகத்தர்) ஆகியோருக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதோடு இருதய சிகிச்சை நிபுணர் Dr.M. குருபரன் அவர்களுக்கும் எமது விசேட நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம் மேலும் இருதய சத்திர சிகிச்சை நிபுணர் அமரர் Dr. ரவி பெருமாள் பிள்ளை அவர்களுக்கும் மற்றும் அவரது OXONIAN HEART FOUNDATION இற்கும் எமது சிரம் தாழ்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம். திருமதி. றோமன் றாகல் அவர்கள் தற்பொழுது பூரண நலத்துடன் வீடு திரும்பியுள்ளார்.

READ MORE